• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொரனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்

policeseithitv by policeseithitv
April 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொரனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு எஸ்‌‌‌ .ஜெயக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தற்போது கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி வரை 30 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும். ஆகவே இன்று பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி காவல் துணை போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு கணேஷ் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி 20.04.2021 அன்று முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரையிலும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomoto போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது என்றும், அதே போன்று முழு ஊரடங்கு நாட்களில் அத்தியவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறைச் சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படுகிறது. ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம், அத்தியவாசியப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்ளுக்கு மிகாமல் கலந்து கொள்வதில் எந்த விதமான தடையுமில்லை, ஆனால் திருமண நிகழச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கபடமாட்டாது உட்பட தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்,

மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும்போது சிலர் பெயரளவுக்கு முகக்கவசத்தை போட்டுள்ளனர், சிலர் வாய்க்கு மட்டும் போட்டுள்ளனர், இவ்வாறு போட்டு பயனில்லை. இந்த நோய் 90 சதவீதம் மூக்கு வழியாகத்தான் வேகமாக பரவுகிறது. ஆகவே முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்‌‌‌பிரண்டு எஸ்.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ எடுத்துரைத்துத்தார். பின் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச முகக்கவசம், தர்பூசணி பழம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் . செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் முருகபெருமாள், முத்துகணேஷ், வெங்கடேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

Next Post

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

Next Post
கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In