தூத்துக்குடி குரூஸ் பர்னாந்திஸ் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் முககவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. ஏன் முக கவசம் அணியவில்லை என போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேட்டதற்கு வாலிபர்
தனது வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு
கீழே அமர்ந்து போலீசாரை கண்டித்து திடீரென கோஷம் போட துவங்கினார். வாலிபர் ஒருவர் தரையில் அமர்ந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷம் போட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போக்குவரத்து ஆய்வாளர் மத்திய பாகம் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்ததால் மத்திய பாகம் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள. மாஸ்க் போடாத நபர்கள் நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கி வரும் நிலையில் பல இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது கொரனோ தொற்று காலத்தில் பொதுமக்கள் காவல்துறையினருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

