• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு குஷ்பு வலியுறுத்தல்!

policeseithitv by policeseithitv
April 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
“தாய் இல்லாமல் நான் இல்லை” – குஷ்பு  உணர்ச்சிமிகு தேர்தல் பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உயிர்களை காக்கும் நோக்கில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை பாஜக வேட்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மூச்சு விட முடியாமல் பரிதவித்துக் கொண்டுள்ளன. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர்.

கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து வருவதால் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. இதனிடையே திடீரென பல மாநிலங்களிலும் பரவலாக ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மருத்துவ ஆக்ஸிஜனை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன். எந்தெந்த நிறுவனங்களால் முடியுமோ அந்த நிறுவனங்களும் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்ரெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருப்பினும் ஸ்ரெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நமக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டுமே. இந்த பெருந்தொற்று காலத்தில் உயிர்களை காப்பதே நம் முக்கிய நோக்கமாகும். ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Previous Post

நேர்மை குணத்தைப் பாராட்டி பெண்ணிற்கு வாழ்த்து- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக அளித்தார்.

Next Post

காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேருக்கு நிவாரணத் தொகை

Next Post
காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேருக்கு நிவாரணத் தொகை

காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேருக்கு நிவாரணத் தொகை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In