திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள்,அடங்கிய வீடியோக்கள்,காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை அறியும் வகையில் LCD TV-அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாஸ்டன் ஜோஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


