• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ்

policeseithitv by policeseithitv
April 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறப்பாக பணியாற்றிய  காவல்துறையினருக்கு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளின் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கயத்தாரிலிருந்து பன்னீர்குளம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி சேதமடைந்திருந்த பகுதியை தாமாக சீரமைத்து பொதுமக்களுக்களின் பாராட்டை பெற்ற கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், முதல் நிலை காவலர் மோகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் நகர் பகுதிகளில் அதிகப்படியான மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்தும், பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்கள் மீது அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்தும், பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் தலைமை காவலர் தாமோதரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 14.04.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து ரூபாய் 1,10,000/- பணத்தை திருடிய 3 எதிரிகளை 7 மணி நேரத்தில் கைது செய்து பணத்தை மீட்டு புலன் விசாரணை அதிகாரிக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 13.04.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய இரு சக்கர வாகன திருட்டு வழக்கின் எதிரியை மாவட்ட கட்டுபாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்டையில் இரவு ரோந்து உட்கோட்ட அதிகாரிக்கு தகவல் கூறி துரிதமாக செயல்பட்டு கைது செய்து வாகனத்தை கைப்பற்ற உதவியாக இருந்த குறுக்குசாலை பகுதியில் இருசக்கர வாகன ரோந்தில் இருந்த ஓட்டபிடாரம் காவல் நிலைய காவலர் விசு என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு வழக்கின் எதிரிக்கு 09.03.2021 அன்று 10 வருட சிறைதண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதமும் பெற்று தந்த மத்தியபாகம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பத்மா மற்றும் முதல் நிலை காவலர் வேல்முருகன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்து மிகுந்த அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆயுதப்படை தலைமை காவலர்கள் ராஜா,  கோபிநாதன், பாலகுமார், பொன்ராஜ், சுந்தரபாண்டி, பொன்னுசாமி, முருகப்பெருமாள், முதல் நிலை காவலர் மணிகண்டன், காவலர்கள் தாமரைசெல்வன், ஆனந்த், செல்வின் ராஜ், அழகர்சாமி, ஜாக்ஸன், மாடசாமி, முனீஸ்வரன், பிரபாகரன், பிரவீன், பிரபாகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
Previous Post

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

Next Post

கொரனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ உருவப்படத்திற்கு சென்னை கமிஷ்னர் மரியாதை

Next Post
கொரனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ உருவப்படத்திற்கு சென்னை கமிஷ்னர் மரியாதை

கொரனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ உருவப்படத்திற்கு சென்னை கமிஷ்னர் மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In