இன்று மாலை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் மறைவையொட்டி கொத்தவால்சாவடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் சக்திவேலின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷ்னர் பவானீஸ்வரி சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் செந்தில்குமார் இணை கமிஷ்னர்கள் , துணை கமிஷ்னர்கள் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.




