விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் தலைவர் திரு சுந்தரவேல் அவர்கள் முன்னிலையில் வியாபாரிகள் வர்த்தக சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் இன்று விளாத்திகுளம் அக்கம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வியாபாரிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கரோனா பரவலை தடுக்க அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகளை குறித்தும் மேலும் கரோனா நோயை தடுக்க நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்
விளாத்திகுளம் ஆய்வாளர் திரு.ரமேஷ், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், விளாத்திகுளம் வியாபாரிகள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


