விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் விளாத்திகுளம் வர்த்தகக் கழகம், விளாத்திகுளம் தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம், சித்த மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் இலவசமாக அளித்து கொரோனோ வைரஸின் 2-வது அலை பரவி வரும் நிலையில் இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள். பின்னர் விளாத்திகுளம் பஜார் பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் இலவசமாக கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பின்பு விளாத்திகுளம் பேருந்து நிலையம் சென்று அனைத்து பேருந்தில் உள்ள பயணிகளுக்கும் முகக் கவசங்களை வழங்கியதுடன் முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் கொரோனோ நோய்த் தொற்று பரவல் விழிப்புணர்வை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த சித்த மருத்துவர் திரு.தமிழ்அமுதன் அவர்கள் ,மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. சுந்தரவேல், விளாத்திகுளம் ஆய்வாளர் திரு.ரமேஷ், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், விளாத்திகுளம் வியாபாரிகள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினர் கலந்து கொண்டனர்.


