தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் நடந்து முடிந்த விளாத்திகுளம் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்து சிறப்பாக பணிபுரிந்த விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் உட்கோட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுசான்றிதழ் வழங்கினார்கள். மேலும் அதற்கு பெரும் துணையாக இருந்த உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் மற்றும் தேர்தல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் அவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.


