ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த 4 பேர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷிங் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமையில் தலைமைக் காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன், சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 19.04.2021 வாகன சோதனை மேற்கொண்டபோது முக்காணி to தூத்துக்குடி செல்லும் சாலையில் வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் மணிகண்டன் (31), ஏரல் பண்டாரவிளையை சேர்ந்த ஜெபராஜ் மகன் எடிசன் பிரபு (28) மற்றும் ஜெபராஜ் ஜோதிமணி மகன் ஏசுராஜா (27) ஆகியோர், தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் மகாராஜன் (37) என்ற ஏஜென்ட் மூலம் விற்பனைக்காக சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் மேற்படி 2 நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து ரூபாய் 4,00,000/- மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருட்கள் அடங்கிய 15 சாக்கு பைகளையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து, மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷிங் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன், திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (18.04.2021) வாகன சோதனை மேற்கொண்டபோது முக்காணி to தூத்துக்குடி செல்லும் சாலையில் வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் மணிகண்டன் (31), ஏரல் பண்டாரவிளையை சேர்ந்த ஜெபராஜ் மகன் எடிசன் பிரபு (28) மற்றும் ஜெபராஜ் ஜோதிமணி மகன் ஏசுராஜா (27) ஆகியோர், தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் மகாராஜன் (37) என்ற ஏஜென்ட் மூலம் விற்பனைக்காக சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் மேற்படி 2 நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 4 பேரையும் கைது செய்து ரூபாய் 4,00,000/- மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருட்கள் அடங்கிய 15 சாக்கு பைகளையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது
மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.



