நெல்லையில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது
இந்த முகாமின் வாயிலாக ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி போடுதல்,மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நெல்லை சந்திப்பு ரயில்வே நிலைய மேலாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில்
நெல்லை காவல் உதவி ஆணையாளர் சதிஷ் குமார், நெல்லை சந்திப்பு ரயில்வே நிலைய மேலாளர் முருகேசன், சந்திப்பு காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி சந்திப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் அலி திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்க செயலாளர் சங்க பொருளாளர் பாலமுருகன், உதவி தலைவர் மின்னல் சிவா, உதவி செயலாளர் உடையார், ரெட் சன் நிறுவன மேலாளர் கணபதி மாரியப்பன், சஜி, ஜெயராம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


