கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவும் , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருவோர் அமரும் இடத்தில் டிஜிட்டல் அடையாள போர்டை யை நிறுவி அதில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கொரோனா முகக்கவசம், ஆன்லைன் ஓ.டி.பி , சாலை பாதுகாப்பு போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பு செய்யப்படும் . இதனை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் இன்று பொதுமக்களின் உபயோகத்திற்காக திறந்து வைத்தார். மேலும் இந்த டிஜிட்டல் அடையாள போர்ட் ல் வரும் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பயனுள்ளதாய் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.




