கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் செல்போன் தொலைந்து போனது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் இந்த ஆண்டில் (2021) ஜனவரி மாதம் சுமார் 35 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. மேலும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இதுவரை 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 15/04/2021 / 11.00 மணியளவில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் லோக நாதன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயதேவி ஆகியோரின் முன்னிலையில்,
சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர்கள் வேலுச்சாமி, மகேஸ்குமார், விஜய்குமார் ஆகியோர் மூலம் மேற்படி செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் உங்களது ஏ டி எம் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும், கிரெடிட் கார்டு லிமிட் அதிகப்படுத்துவதாகவும் கூறி அவர்களது மொபைல் எண்ணிற்கு வந்துள்ள OTP நம்பர் சொல்லவும் என்று கேட்டு ஏமாற்று வேலை நடப்பதாகவும்,
செல்போன் கம்பெனியிலிருந்து அழைத்துள்ளோம் மொபைல் டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாகவும் அதற்காக மாதம் ஒரு பெரிய தொகையை வாடகையாக தருவதாகவும், அட்வான்ஸ் தொகையாக 10 லட்சம் தருவதாகவும் அதற்க்காக முன்பணம் அனுப்பவும் என்று கேட்டும் ஏமாற்று வேலை நடப்பதாகவும்,
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் உங்களது உறவினர் போட்டோ போட்டும் அவர்களைப்போல மெசெஞ்சரில் பேசி அவசரமாக மருத்துவ செலவிற்க்கு பணம் வேண்டும் என்று கேட்டு ஏமாற்று வேலை நடப்பதாகவும்..
அரசு வேலை, ஏர்போர்ட்டில் வேலை, உடனடி கடன் தருவதாக கூறி ஆதார் எண், பேன் கார்டு, வங்கி பாஸ்புக் போன்ற விவரம் பெற்று பிராசசிங் சார்ஜ் கட்ட வேண்டும் என்று கூறி ஏமாற்று வேலை..
OLX ல் ரானுவ அதிகாரி போன்று தொடர்பு கொண்டும், போலியான ஐடி கார்டு அனுப்பியும் இருசக்கர வாகனம் புல்லட், கார், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை விற்பனை செய்வதாகவும் அட்வான்ஸ் அனுப்பினால் கொரியர் செய்வதாகவும் கூறி ஏமாற்று வேலைகள், மோசடிகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும்
இதுபோன்ற மோசடிகளை நம்பி தங்களது சுய விவரங்களையும், பணத்தையும் இழக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது..
மேலும் பொதுமக்கள் யாரேனும் இது போல பண மோசடிகளில் பாதிக்கப்பட்டால் உடனடியாக அல்லது 2 மணி நேரத்திற்குள்ளாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்தை அனுகி புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.


