இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு விழிப்புணர்வு வழங்கி பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் பராமரிக்க வேண்டிய முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பராமரித்தல், கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவுதல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தியும் வந்திருந்த வர்த்தக உறுப்பினர்களுக்கு முககவசம் திரவ சுத்திகரிப்பான் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கினார் வியாபாரிகள் வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த கொரானா விழிப்புணர்வு பலகைகள் வைத்து, மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சென்னை தெற்கு பெருநகர கூடுதல் கமிஷ்னர் கண்ணன் இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் துணை கமிஷ்னர் பகலவன் மற்றும் காவல் அதிகாரிகள் வர்த்தகர்கள் திருவல்லிக்கேணி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.



