திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மரியான் மகன் சகாய பிரான்சிஸ் வினோத் (24), இவர் தனது உறவினரான 22 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமண ஆசை காட்டி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் சகாய பிரான்சிஸ் வினோத், திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையாம். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள சகாய பிரான்சிஸ் வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.


