கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் சமீபகாலமாக தவறவிடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு குழுவினரால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு சுமார் 7 இலட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கபட்ட செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நபர்களிடம்
ஒப்படைத்தார். மேலும் வடசேரி காவல் நிலைய குற்ற எண். 130/2021
வழிப்பறிகுற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை கண்டுபிடித்து
அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனம் மற்றும் 3 கைபேசிகள்
கைப்பற்றபட்டது. இதனை கண்டுபிடிக்க காரணமான கன்னியாகுமரி
மாவட்ட காவல் துறை சைபர் குற்றபிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார் மேலும் இது சம்மந்தமாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 366 கைபேசிகளை
கண்டுபிடிக்கபட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.



