கோடைக்காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்திலும் காவல்துறையினர் தங்களது பணியினை சிறப்பாக செய்துவருகின்றனர்.
குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் முழு நேரமும் வெயிலில் நின்று பணிசெய்கின்றனர். இந்நிலையில் குளச்சல் உட்கோட்ட காவல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் வைத்து குளச்சல் போக்குவரத்து போலீசார் மற்றும் ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்களுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தர்ப்பூசணி வழங்கினார்



