இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொண்டார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார்கள். திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இந்த ஊராட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதற்கு முன்பே, மைக்செட் கட்டி கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, மினி டோர் ஆட்டோவில் பெரிய தண்ணீர் டேங்கை வைத்து கிருமி நாசினி நிரப்பி ஊர் முழுக்கத் தெளிக்கச் செய்தார்.
சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நோயெதிர்ப்புக் கஷாயம் தயாரித்து தெருத்தெருவாகக் கொண்டுசென்று மக்களுக்கு வழங்கினார்.
பாண்டுக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் நேற்று கொரானா தடுப்பூசி 20 பேருக்கு போடப்பட்டது .
இதில் திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் பின்னர் ஊராட்சி துணை தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலாளர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
டாக்டர் அல்சிபா, உத்திரச்செல்வி, மணிமேகலை, ஆரோக்கிய ஜெபஸ்டின் அமலா, கண்ணன், சாந்தி, பஞ்சவர்ணம் ஆகியோர் கொரானா தடுப்பூசி பணிகளை சிறப்பாக செய்தனர்.

