சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி M.முருகன் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.தரணிதரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் குருமூர்த்தி அமர்வுகள் முன்னிலையில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள் சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்ளிட்ட 107 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர், இதில் குடும்ப நல வழக்காக கணவன்,மனைவி பிரிவதற்கு வழக்கு தொடுத்திருந்தனர் பின்னர் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்தனர் அதனால் இந்த வழக்கு தீர்க்கப்பட்டது, சொத்து வழக்கு 10, மோட்டார் வாகன விபத்து 14 வழக்குகளும் தீர்த்து வைக்கப்பட்டனர், காசோலை மோசடி வழக்கு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொகை 1,41,62388 ரூபாய் தீர்த்து வைக்கப்பட்டனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


