தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்முக நோக்கில் வள்ளலாரின் படைப்புக்கள் எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
கல்லூரி துணைத்தலைவர். எ.ஸ். சேவுகன் செட்டியார், செயலர் சாந்தி ஆச்சி முன்னிலை வகித்தனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேரா. கண்ணதாசன் நோக்க உரை ஆற்றினார். அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ராசாராம் ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்க உரை ஆற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அயலகக் கல்வி மைய இயக்குனர் குறிஞ்சி வேந்தன் ஆய்வுக்கோவையைப பெற்றுக்கொண்டு உரையாற்றினார். கங்கை மணிமாறன் உணவு வேளையையும் பொருட்படுத்தாது ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார். .. துறைத் தலைவர் முனைவர் மாரிமுத்து வரவேற்றார். முதல்வர் வஸ்திராணி வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முத்தழகு கணேசன், இளங்கோ இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். முன்னாள் பேரா சிரியர்கள் .முனைவர் பழனி ராகுலதாசன்,முனைவர் ஆறுமுகம் ,முனைவர் குமரப்பன், முனைவர் சோமசுந்தரம். முனைவர் பேரா.மு.பழனியப்பன், தமிழ் ஆர்வலர்கள் மெய்யாண்டவர், அரவரசன், ஈழம் மலர் மன்னன், தெய்வசிகாமணி, தமிழ் கொண்டல் குமார், தமிழ்ச்செல்வன், திருஞான சம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

