திருப்புத்தூர் அடுத்த கொளிஞ்சிப்பட்டியில் அய்யனார் கோவில் கண்மாயில் ஆண்டுதோறும் விவசாயம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் எஞ்சியுள்ள தண்ணீரில் மீன்கள் பிடிக்கும் கிராமத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கொளிஞ்சிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான அப்பாக்குடிப்பட்டி, காட்டாம்பூர், உத்தமசாலை, தரியம்பட்டி, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அய்யனார் கோவில் கண்மாயில் ஊத்தா, கச்சா, வலை, வயர், கூடை, மீன்பிடி வலை, கொசுவலை, வாரி, அரிகூடை ஆகியவற்றைக் கொண்டு மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த கண்மாயில் கெண்டை, கெழுத்தி, குறவை, அயிரை, சிலேபி, கட்லா உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து குரவை மீன், ஜிலேபி மீன், கெண்டை மீன், கெளுத்தி மீன் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் பிடித்தனர். பிடித்த மீன்களை கிராம மக்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் அடைத்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

