மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேலின் புதிய நாவல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேல் எழுதிய ”ட்ரீம்ஸ் ரியாலிட்டி டெசிட் மேட்டர்” என்ற புதிய நாவல் வெளியீட்டு விழா திருப்பரங்குன்றம் அருகே தனியார் உணவு விடுதியில் வைத்து நடைபெற்றது.
இப்புத்தகத்தினை சின்னத்திரை புகழ் தினேஷ் சந்திரா, திரைப்பட நடிகர் வாகை பிரபு, மற்றும் தொழிலதிபர் சுஜாதா ஆகியோர் வெளியிட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் டாக்டர் சின்னராஜா,
பொறியாளர். பாலசுப்ரமணி உட்பட ஏராளமானோர் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேல் எழுதிய
”ட்ரீம்ஸ் ரியாலிட்டி டெசிட் மேட்டர்” என்ற புதிய நாவல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மதுரை திருப்பரங்குன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
செய்தி தொகுப்பு கொடைக்கானல் வி ஆனந்த்



