தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தியாகத்தாய் சின்னம்மா பேரவை நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம், மாநில தலைமை நிலைய செயலாளரும், மாவட்டச் செயலாளருமான காஞ்சிபுரம் லயன் டாக்டர் கே.முத்து பட்டாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சசிகலாவுக்கு கோவில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரிகள் ஆகியோர் குங்கும பிரசாதம் வழங்கினார்கள். அதன் பின்னர் அவர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கு மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலாவிற்கு, காஞ்சியில் தியாகத்தாய் சின்னம்மா பேரவை நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் தியாகத்தாய் சின்னம்மா பேரவை நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம், மாநில தலைமை நிலைய செயலாளரும், மாவட்டச் செயலாளருமான காஞ்சிபுரம் லயன் டாக்டர் கே.முத்து மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர் த. காஞ்சி சரவணா காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கிருபாகரன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பா. மணிகண்டன் காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் முனிஸ்பால் ரவி காஞ்சி நகர செயலாளர் கார்த்திகேயன் காஞ்சி நகர இளைஞரணி செயலாளர் து.பாலா காஞ்சி நகர அவைத்தலைவர் பாலாஜி காஞ்சி நகர பொருளாளர், சுதாகர் வார்டு பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சிக்காக நரசிம்மன் சரவணா

