கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
பின்னா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். அடுத்த 5 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று மாலை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கனிமொழி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

