நாளை நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் தொகுதிக்கு 29 மொபைல் வாகனங்களும், தூத்துக்குடி தொகுதிக்கு 26 மொபலை வாகனங்களும், திருச்செந்தூர் தொகுதிக்கு 25 மொபைல் வாகனங்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 21 மொபைல் வாகனங்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 29 மொபைல் வாகனங்களும், கோவில்பட்டி தொகுதிக்கு 28 மொபைல் வாகனங்களும் ஆக மொத்தம் 158 மொபைல் வாகனங்களும் காலை (04.04.2021) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி அவைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்காக நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.




