தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்து தளவாட பொருட்களையும் ஆயுதமேந்திய காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்காகவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காகவும் மொத்தம் 130 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த வாகனங்களின் நகர்வுகள் அனைத்தும் ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

