ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளான புளியங்குளம், கால்வாய், திருவரங்கப்பட்டி, சாத்தான்குளம் பேருராட்சி மற்றும் அரசூர் ஊராட்சி பகுதிகளான வாகைனேரி, தொட்டிக் காரன் விளை பகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பேசுகையில், “சாத்தான்குளம் பகுதியில் தொழில் வளம்பெற தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் அமைத்து வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன். ஆண்டுக்கு 25 பேர்களை எனது பொறியியல் கல்லூரியில் படித்த வைத்து அவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன். அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக கிடைக்க செய்வேன். எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என்றார்.
அவருடன் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, சக்திவேல் முருகன், பிச்சிவிளை சுதாகர், பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், நகரத் தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகளிரணி தலைவி புளோராஜோசப், ஒன் றிய திமுக செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப், அலெக்ஸ், நயினார், முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, வட்டார மனிதநேய மக்கள் ஒன்றியசெயலாளர் தௌபீக், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

