திமுக தலைவர் தளபதி அவர்களை சந்தித்து மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் அ.ம.மு.க மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி இஸ்மாயில் திமுக.,வில் இணைந்தார்.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி அவர்களை அ.ம.மு.க மாநில சிறுபான்மை பிரிவு செயலளார் தம்பி இஸ்மாயில் அவர்கள் சந்தித்து மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் திமுக.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது குன்னூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராமசந்திரன், கூடலூர் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, செந்தில், ராஜூ ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

