குன்னூர் ஏப்01 நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சி D வினோத், உதகை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் அவர்களை ஆதரித்து தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரையாற்றினார். முன்னதாக கூடலூர் தொகுதி வேட்பாளர் பொன் ஜெயசீலன் அவர்களை ஆதரித்து கூடலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார் பின்னர் குன்னூர் பகுதிக்கு வருகை தந்த முதல்வருக்கு கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் மத்தியில் முதல்வர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவிற்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அம்மாவின் அரசுதான் படுகர் இன மக்களை ஆதிவாசி இன பட்டியலில் சேர்க்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதனை ஏற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். குன்னூருக்கு கரன்சி குடிநீர் திட்டமும் கோத்தகிரிக்கு அலகரை குடிநீர் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குன்னூர் பகுதியில் 12 மினிகிளினிக் ஏற்படுத்தப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 440 கோடி செலவில் அரசு மருத்துவமனை உருவாக்கப்படும் இந்த நீலகிரி மாவட்டம் அம்மா அவர்கள் நேசித்த மாவட்டம் அதனால் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும் மேலும் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரே அரசு அம்மா அரசு அடுத்தவரை களங்கப்படுத்தி, அடுத்தவரை அசிங்கப்படுத்தி , கொச்சைப் படுத்தி ஆட்சிக்கு வரவேண்டும் என முயற்சிக்கின்றனர். அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி சந்தோஷம் படுபவர்கள் தான் திமுக. பெண்களை இழிவுபடுத்திப் பேசி வரும் திமுகவிற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கூறினார். இஸ்லாமிய மக்களுக்கும் கிறிஸ்துவ மக்களுக்கும் புனித பயணம் செல்ல அதிக சலுகை தருவது அம்மாவின் அரசு தான் எனக்கூறி கப்பச்சி D வினோத் அவர்களுக்கும் பாஜக வேட்பாளர் போஜராஜன் அவர்களுக்கும் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் .


