தூத்துக்குடி தொகுதியின் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தூத்துக்குடி – பாளை ரோட்டில் உள்ள காய்கனி மார்க்கெட் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளரும், ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை தலைவருமான சி.த.செல்லப்பாண்டியன், விஜயசீலனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் விஜயசீலன் மற்றும் அதிமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் சென்றனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆதரவை தெரிவித்தனர். மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


