சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஈபி ரோட்டில் அமைந்துள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது
முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும், தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்,பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் உள்ள பாலை அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது, கோயில் வளாகத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா். இந்த பால்குட திருவிழாவில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா அவர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தார், பின் கோவில் நிர்வாக தலைவர் சர்வேயர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு மரியாதை செய்தார்கள். இதில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


