சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா அவர்களை ஆதரித்து பாஜக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மயில்வாகனன் தலைமையில் 100க்கு மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்க பேரணி மேற்கொண்டனர், தேவகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணங்கோட்டை, எழுவன்கோட்டை,காரை,தெண்ணிர்வயல்,திருமணவயல், கல்லங்குடி ஆகிய பஞ்சாயத்திற்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிராம பொது மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ள நல்ல திட்டங்களை எடுத்துரைத்தும் , காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் எச்.ராஜா அவர்களை வெற்றி பெற செய்தால் காரைக்குடி தொகுதி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவார் என்று கிராம பொதுமக்களிடம் கூறி தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


