சட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வரும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து உதகையில் கமா்சியல் சாலை பகுதிக்கு காா் மூலம் வந்தார். கமா்சியல் சாலையிலிருந்து மணிக்கூண்டு பகுதி வழியாக ஏடிசி சுதந்ததிர தின சதுக்கம் பகுதிக்கு வாகனத்தில் வாக்கு சேகரித்தார்
பின்னா் அங்கு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றினார்
இதையடுத்து மீண்டும் தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு காா் மூலம் திரும்பிச் சென்று அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் தளி சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்கச் சென்றார்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் உதகையில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்ததையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செய்தி: நீலகிரி அப்பாஸ்

