தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்குகானதபால் வாக்குகள் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது.
காவல்துறையினர் தபால் வாக்குகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு அவர்கள், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு , திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜூ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தபால் வாக்குகள் சரியான முறையில் நடைபெறுவதை ஆய்வு செய்தனர்.





