சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக்காவலர் நாகநாதன் என்பவர் 400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவில் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வாகி பஞ்சாப் மாநிலம் , பாட்டியாலாவில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார் . சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று மேற்படி காவலர் நாகநாதனை நேரில் வரவழைத்து ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷ்ணர் அமல்ராஜ் , , ( தலைமையிடம் ) ஆயுதப்படை துணை கமிஷ்னர் சௌந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர் .

