கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல்அமைதியாகநடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் அனைத்து காவல் உட்கோட்ட சரகங்களிலும் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட் டது. கடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் காவல்துறையினர் பங்கேற்ற அணிவகுப்பு கடலூர் சரகத்தில் காவல் துறை அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய துணை ராணுவப் படை, காவல்துறையினர் என 200 பேர் கொண்ட காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது இந்த அணிவகுப்பு கடலூர் மார்கெட் கமிட்டியிலிருந்து புறப்பட்டு
கடலூர் முதுநகர் காவல் நிலையம், மார்க்கெட் சுத்துகுளம் வரை சென்று நிறைவடைந்தது அதுபோன்றே சிதம்பரம் உட்கோட்ட காவல் சரகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் லா-மேக் தலைமையில் நான்கு முக்கிய வீதி களில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 200 பேர் அணிவகுப்பு ஒன்றையும் மேற்கொண்டனர். ஏனைய உட்கோட்ட காவல் சரகங்களான நெய்வேலி பண்ருட்டி திட்டக்குடி விருத்தாச்சலம் சேத்தியாத்தோப்பு என ஏழு உட்கோட்ட காவல் சரகங்களிலும் காவல் துறை மற்றும் துணை இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.


