தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தொண்டர்கள் படைசூழ வீதிவீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரம்!! சூடு பிடித்தது தேர்தல் களம்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் அவர்களை ஆதரித்து. கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை குழு தலைவர் சி த செல்லப்பாண்டியன் இன்று. 30.03.21 மாலை 6.30 மணியளவில். 1ம்கேட் காந்தி சிலை முன்பிருந்து புறப்பட்டு 2ம்கேட் ஜோசப் தியேட்டர் பகுதி பாண்டுரங்கன் தெரு எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதி மட்டகடை சேதுராஜா தெரு புதுதெரு திரேஸ்புரம் பூபாலராயர் புரம் மேட்டுப்பட்டி தொம்மையார் கோயில் தெரு சங்குகுழி காலனி முத்தரையர் காலனி உடைமரத்தெரு பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.
நேற்று சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதுபோல் இன்று 1ம் கேட் காந்தி சிலை முன்பிருந்து துவங்கிய இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் படை சூழ திறந்தவெளி ஜீப்பில் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக அடிமட்ட தொண்டன் வரை அரவணைப்போடு பழக கூடியவர் சி.த.செல்லப்பாண்டியன். ஆகையால், அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் செல்லப்பாண்டியன் பின்னாள் ஓன்று கூடி அணிவகுத்த காட்சி எதிர் கட்சியை கதிகலங்க செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது: அதிமுக சாதனைகளையும் திட்டங்களையும் அனைத்து தரப்பினர்களும் நன்கு அறிவர். குறிப்பாக, பெண்களுக்கு பல்வேறு வகையில் நல்லதொரு திட்டங்களை இபிஎஸ் தந்துள்ளதால், பெண்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. அதிமுக பொற்கால ஆட்சி தொடர்ந்திட இரட்டை இலைக்கே வாக்கு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குறைகளை உடனடியாக கேட்டறிந்து உதவி செய்யக் கூடியவர் நமது வேட்பாளர் விஜயசீலன்.
இந்த வாக்கு சேகரிப்பில் கிழக்கு பகுதி செயலாளர் முன்னாள் துணை மேயர் பி சேவியர்
மேற்கு பகுதி செயலாளர் ஏ முருகன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ரத்தினம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் இரா. அமிர்த கணேசன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், முன்னாள் நகர அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார் சகாயராஜ் சரவணன் ஷர்மிளா அருள்தாஸ் டேவிட் ஏசுவடியான் சாந்தி மெஜிலா மீனவர் கூட்டுறவு சங்கம் கிளமெண்ட்ஸ் மற்றும் ஜெனோபர்,தோமா, அமல்ராஜ், மற்றும் வட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


