தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரை மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதான வளாகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், பாதுகாப்பு படையினரை நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2097 வாக்குசாவடிகளுக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 கம்பெனி 160 வீரர்கள் பணியில் உள்ளனர். தற்போது புதிதாக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 கம்பெனி 584 படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஏற்கனவே தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திட்டமிட்டு அவர்களுக்கு வழங்க உள்ளார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே சுழற்சி முறையில் பணியாற்றி வரும் பறக்கும்படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் மத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 குழுக்களாக (Flying Squad in 3 shits) விளாத்திகுளம் தொகுதிக்கு 9 குழுக்களும், தூத்துக்குடி தொகுதிக்கு 9 குழுக்களும், தூத்துக்குடி தொகுதிக்கு 9 குழுக்களும், திருச்செந்தூர்; தொகுதிக்கு 9 குழுக்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 9 குழுக்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 9 குழுக்களும் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கு 15 குழுக்களாக என மொத்தம் 60 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.
இக்குழுவினருடன் எல்லைப் பாதுகாப்பு படையினரும் இணைந்து 24 ஒ 7 மணி நேரமும் கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்து வருவார்கள். இக்குழுக்கள் வாகன பரிசோதனைகளை மேற்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி பணமோ, பரிசுபொருட்களோ பிடிப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று அனைத்து தொகுதிகளுக்கும் 55 நிலையான கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 10 குழுவும் நியமிக்கப்பட்டு, 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.
வாக்குபதிவு தினத்தன்று ஒவ்வொரு வாக்குசாவடியிலும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினருடன் இணநை;து எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவது, கோவிட் 19 மாஸ்க் அணிந்து செல்ல வலியுறுத்துவது மேலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளார்கள். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், எல்லை பாதுகாப்பு படை தளவாய் ராஜேஷ் மேகி, கூடுதல் தளவாய் சந்துகுமார் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.


