திருவள்ளுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
யாழி சிலம்பம் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூரில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.03.2021 நடைபெற்ற மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் இவற்றில் மினி சப் ஜூனியர்,சப் ஜூனியர்,ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதில பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் நேரடி போட்டி மற்றும் தனித்திறமை போட்டி இரு வகை போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளுர் வீர அபிமன்யு சிலம்பம் அகாடமி மாணவர்கள் யேமாவதி, நரேஷ் கௌதமி சுவேந்தர் சபரீஷ் பவதரனி ஹீஅரி மோகன் பிரியதர்ஷினி ஆகியோர் .தங்க பதக்கமும்தினகரன் , மாதேஷ் , ரோஷன் யுவஹி ஆகியவர்கள் வெள்ளி பதக்கமும் தீபக் வெண்கலம் பதக்கமும் பெற்றுள்ளனர் .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்த வீர அபிமன்யு சிலம்பம் அகாடமி மாஸ்டர் சிலம்பம் பாஸ்கர் ..வெற்றி பெற்ற மாணவர்களை மாஸ்டர் சீனிவாசன் , வடிவேலு பாஸ்கர் ஆகியோர் பாராட்டினர்


