கன்னியாகுமரி மாவட்டம் 2021-சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் குளச்சல் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி IPS தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் இனயம் முதல் முள்ளூர்துறை வரை நடைபெற்றது . இதில் குளச்சல் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளினர்கள், மற்றும் குஜராத் மாநில காவல்துறையினர் உட்பட மொத்தம் 201 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



