தூத்துக்குடி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் விஜய சீலனுக்கு முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும் வேளாண்மை குழு தலைவருமான செல்லப்பாண்டியன் நேற்று முதல் தீவிரப் பிரச்சாரத்தை துவங்கினார் இதனால் வேட்பாளரும் அதிமுக தொண்டர்களும் குஷியில் காணப்படுகின்றனர்
மண்ணின் மைந்தன் தொழிலாளிகள் ஏழை எளிய மக்கள் ஆகியோரிடமும் மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வரும் செல்லப்பாண்டியன் அவர்கள் பதவியில் இல்லாமலிருந்தாலும் அதிமுக தொண்டர்கள் தொகுதி மக்களுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருவார் குறிப்பாக குரானா தொற்று காலத்தில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து பெரிதும் உதவினார் இதனை தூத்துக்குடி மாநகர மக்கள் நன்றி கடனாக அவருக்கு இந்த முறை தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி அளிக்கும் பொழுது அமோக வெற்றிபெற வைக்க வேண்டுமென முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் க்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது மக்கள் செல்வாக்கு மிக்க செல்லப்பாண்டியன் தேர்தல் களத்தில் தீவிரமாக குதித்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசத் தொடங்கினார் இதனால் எஸ்டிஆர் விஜய் சீலன் மற்றும் நிர்வாகிகள் செல்லப்பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து தங்களுடன் முழுமையாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது எப்போதுமே கட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அரசு பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக தலைமை கட்டுப்பட்டு தேர்தல் பணி ஆற்றுவதில் செல்லப்பாண்டியன் அவர்களுக்கு என்பது ஒரு தனி சிறப்பு உண்டு தேர்தல் நாயகன் என்ற பெயரும் உண்டு .குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரது சிலைக்கு செல்லப்பாண்டியன் தூத்துக்குடி வேட்பாளர் விஜய சீலன் உடன் இணைந்து. குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நேரடியாக அதிமுக தலைமை தேர்தல் காரியாலயத்திற்கு வந்து அதிமுக தொண்டர்கள் உடன் தேர்தல் வியூகம் வகுத்தார் இதனால் அதிமுக தொண்டர்கள் ஏக குஷியில் காணப்பட்டனர்.
தொண்டர்களுக்கு எந்தவொரு தகவல் என்றாலும் என்னிடம் கேளுங்கள் நாம இன்னும் ஒரு வார காலம் தூக்கத்திற்கு குட்பை கொடுத்துவிட்டு இரவு பகல் என்று பாராமல் தீவிரமாக மக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி நமது தொகுதி வளர்ச்சி இனிமேல் மேம்பட உள்ளது என்பதை தெரிவித்து முழு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென செல்லபாண்டியன் அவர்கள் கேட்டுக்கொண்டார் இதனால் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக கூட்டணி கட்சி சார்ந்தவர்கள் ஆகியோர் உற்சாகமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முத்தையாபுரம் பகுதியில் திறந்த ஜீப்பில் சீனா தானா செல்லபாண்டியன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜய் சீலன் ஆகியோர் இணைந்து வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது பேசிய செல்லப்பாண்டியன் முதல்வர் இபிஎஸ் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அந்தத் திட்டங்கள். அனைத்தும் தொடரவேண்டும் என்றால் நாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார் இந்த தொகுதியைச் சார்ந்த விஜய் சீலன் வெற்றிபெற்றால் நிச்சயமாக மக்கள் சேவகனாக செயல்படுவார் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்த செல்லபாண்டியன் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வணிகர்கள் விவசாயிகள் ஆகியோரிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். மேலும் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றிக்கனியை பறிப்பதாக செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார் செல்லபாண்டியன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் குஷியில் காணப்படுகின்றன.


