ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி சுயேச்சையாக போட்டியிடு கிறார்.இவருக்கு ஆதரவாக ஆலங்குளம் காவல் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பேச கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். உரிய அனுமதி பெறாததால் ஹெலிகாப்டர் தரையிறங்க அதி காரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றது.
இதனைக் கண்டித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தென்காசி – திருநெல்வேலி சாலை ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


