தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சந்திரன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் நடந்து சென்று சென்று முரசு சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சந்திரன் போட்டியிடுகிறார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
எளிமையான மனிதர் தூத்துக்குடி கடம்பூர் பகுதியை சேர்ந்த சந்திரன் அவர்கள் அவர் வாக்கு கேட்டு சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒவ்வொருவராக வார்டு பகுதியிலும் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
அப்போது மக்களிடையே வேட்பாளர் பேசுகையில், தூத்துக்குடியில் மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்குப்பட்டனர். முந்தைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தான் தோன்றித் தனமான அவர்களது வாழ்க்கை வசதியை தான் மேம்படுத்தினர் பொதுமக்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. என்று பேசியவர் என்னை வெற்றி பெற செய்தால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகள், பூங்கா, கல்வி நிலையங்ள், குடிநீர் வடிகால்களை மேம்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இவருடன்
மாவட்ட பொருளார் விஜயன், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் தயாலிங்கம், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ஜெயக்குமார், பகுதி செயலாளர் அரசகுமார், பொன்ராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜபொம்மு, வட்ட செயலாளர் சுப்புராஜ், இல்லசாமி, மொட்டை ஆறுமுகம், ஆதிலிங்கம், வட்ட பிரதிநிதி செல்வராஜ், ஜெயராமன் கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையாபுரம் பரமசிவம், மற்றும் மணிராஜ் உட்பட பலர் உடன் சென்று கழக நிர்வாகிகள் வீதி வீதியாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தேமுதிக வேட்பாளர் சந்திரன் அவர்களுக்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

