ஹோலிப் பண்டிகையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வித வித நிறங்களைப் போன்று மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் புதிய உற்சாகத்தை உண்டாக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் கரோனா முடக்கம் காரணமாக மக்கள் வழக்கமான உற்சாகமின்றி தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


