பெண்மைக்கு உயர் பெருமை சேர்த்த மனிதாபிமான பெண் உதவி ஆய்வாளர்
கொரோனா பாதிப்பால் வெறிச்சோடி கிடக்கும் வீதிகளில் ஆங்காங்கே உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்களால் உணவு கொடுத்து ஒரு புறம் மனிதம் நிகழ்ந்து வர, வாயில்லா ஜீவனான நாய் ஒன்றின் பசி அறிந்து , அந்த ஜீவராசிக்கு தனக்கு வந்த இரவு உணவை காவல் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தந்த செயல் நெகிழ்ச்சியை தருகிறது!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதையடுத்து, தொடர் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் தூத்துக்குடி மாநகரத்தில் ,குரூஸ் பர்னாந்து சிலை அருகில் மத்திய பாக காவல் உதவி ஆய்வாளர் ரோடா பாய்
ஜெயசித்ரா தலைமையில் காவலர்கள் இன்று ( 26.4.2020) மாலை 6.30 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது,அங்கே ஒரு நாய் ஒன்று பசி மயக்கத்தில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.அதன் பசி தேவையை அதன் மூலம் அறிந்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் ரோடா பாய் ஜெயசித்ரா தான் வைத்திருந்த தன்னுடைய இரவு உணவை அந்த நாய்க்கு கொடுத்தார்.அதன்பின் அந்தநாய் உண்டு வயிறு நிறைந்த நிம்மதி பெரும் மயக்கத்தில் படுத்து உறங்க ஆரம்பித்து விட்டது.
இல்லாதவர் தன் இயலாமையை கேட்டுக்கூட பெற்றுவிடலாம்! கேட்டு பெற முடியாத இயலாத நிலை உள்ளவர்களின் நிலை அறிந்து உதவுவது மனிதத்திலும் சிறந்த மனிதமே!
இப்பெண் உதவி ஆய்வாளரின் இத்தகைய செயல் போற்றப்படும் பெண்மைக்கு உயர் பெருமையே சேர்க்கிறது!
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வந்த நிலையில் தூத்துக்குடி
பொதுமக்கள் பலர் பெண் உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயத்தை மனதார பாராட்டி வருகிறார்கள். போலீஸ் செய்தி டிவி சார்பிலும் மனித நேயமிக்க தூத்துக்குடி மத்திய பாகம் ஆய்வாளர் ரோடா பாய் ஜெய சித்ரா அவர்களுக்கு ராயல் சல்யூட்
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து
பால சுப்பிரமணி
