கொரோனா வைரஸ் உலகத்தை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்க பட்டு உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை சமூக அமைப்புகள் பல்வேறு கட்சியினர் தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், முககவசம்,
சானிடைசர், ஆகியவை வழங்கி வருகின்றனர் அந்த வரிசையில் கொடைக்கானலில் எந்த பேரிடர் 
காலங்களிலும் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக உதவி செய்யும் அமைப்பு ஆக விளங்கும் கொடைக்கானல்
செஞ்சிலுவை சங்கம் இந்த கொரோனா தடை உத்தரவு காலகட்டத்தில் உணவு பொருள்கள் உட்பட பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளனர். செஞ்சிலுவை
தலைவர் திரு கே சி ஏ கே குரியன் ஆபிரகாம் அவர்கள் தலைமையில் நிவாரண பொருள்கள் வழங்கபட்டது இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நாராயணன் காவல்துறை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் பங்கேற்று பொது மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினர். இதில்
அதிமுக முன்னாள் நகர மன்ற செயலாளர் ஸ்ரீதர் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் மேலும் சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர் கொடைக்கானல் பகுதியில் உள்ள சுமார் 400 பேருக்கு தலா ரூபாய் 500 மற்றும் முக கவசம் உணவு பொருள் காய்கறிகள் ஆ ஆகியவை வழங்கப்பட்டது
செய்தி தொகுப்பு
கொடைக்கானல்
வி. ஆனந்த்
