கொடைக்கானலில் 2000 பேருக்கு உணவு பொருளான அரிசி, காய்கறி தொழில் அதிபர் தண்டபாணி வழங்கினார்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொது மக்கள் நலனில் தனி அக்கறையோடு அவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ எல்லை அரசு லாரி சர்வீஸ் உரிமையாளரும் கொடைக்கானல் தொழில் அதிபருமான
திரு.தண்டபாணி அவர்கள் 144 தடை உத்தரவு மூலம் அன்றாட பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய கொடைக்கானல் பொதுமக்கள் சுமார் 2000 பேருக்கு உணவு பொருளான அரிசி, அணைத்து வகை காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க முடிவு செய்து இன்று 26/04/2020 சுமார் 300 பேருக்கு அரிசி காய்கறிகள் ஆகியவை சமூக இடைவெளி பின்பற்றி வழங்கினர். நாளையும் இந்த நிவாரண பொருள் வழங்கும் பணி நடைபெறும் என்றும் தொடர்ந்து 2000 பேருக்கு கொடைக்கானலில் நிவாரண பொருள் வழங்கப்படும் என தொழில் அதிபர் தண்டபாணி தெரிவித்தார். இவரின் மனித நேயமிக்க இந்த பணியை அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் இந்த மனித நேயமிக்க பணிக்கு போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பிலும் வாழ்த்துகிறோம்
செய்தி தொகுப்பு
போலீஸ் செய்தி
டிவி க்காக
கொடைக்கானலில் இருந்து
வி. ஆனந்த்

