சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேவகோட்டை ஒன்றியம் தளக்கவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசின் பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு அட்டை பலபேருக்கு வழங்கியுள்ளதாகவும், மத்திய அரசு வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாகவும், விவசாயிகளுக்கு 5 வருடத்திற்கு 30 ஆயிரம் மத்திய அரசு கொடுப்பதாகவும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாள் தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும்,நம்ம தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மத்திய அரசின் மூலிகை பண்ணை திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

