சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேவகோட்டை ராம்நகர், தியாகிகள் பூங்கா,ஒத்தக்கடை, ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். பின்னர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்
திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும், கருத்துக் கணிப்பு மக்களின் மனநிலையை பொறுத்து அமையும், பாராளுமன்றத் தேர்தலை விட இந்தத் தேர்தல் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம், வாக்களிக்கும் இயந்திரத்தை வைத்து ஒன்றும் பண்ண முடியாது, நான் பல தேர்தலை சந்தித்து இருக்கிறேன் மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம், வாக்குகள் என்ன அதிக நாட்கள் ஆனாலும் நாங்கள் தான் வெற்றி அடைவோம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மோசமான சாலையை சரி செய்வோம், பாதாள சாக்கடை திட்டத்தை முடிப்போம்,வேட்பாளர் மாங்குடி அவர்கள் பஞ்சாயத்து தலைவர் ஆக இருந்ததால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வார்,
பத்து வருடமாக அதிமுக அரசு வெறும் அறிவிப்பு மட்டும்தான் வெளியிட்டிருக்கிறது தவிர தமிழ்நாட்டில் ஒரு வளர்ச்சியும் இல்லை, ஆனால் நாங்கள் தேர்தல் அறிக்கையில் முதலீடுக்கு முக்கியத்துவம் வழங்குவோம்,
பத்து வருடமாக அதிமுக ஒரு சாதனையும் செய்யவில்லை என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

