தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி துவங்கி வைத்தார், புளியால் ராணி மண்டபத்தில் இருந்து தொடங்கி புளியால் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது,இந்த அணிவகுப்பில் தேவகோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படை ஆகியோர் பங்கேற்றனர்.பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிக்க வேண்டும், 100 சதவீதம் ஓட்டுகள் பதிவாக வேண்டும், மக்களிடம் போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

